taliban pour liquor to canal: 3000 லிட்டர் மதுவை சாக்கடையில் ஊற்றிய தாலிபன்கள்… காரணம் இதுதான்… – taliban pour 3,000 litres of liquor into canal

taliban pour liquor to canal: 3000 லிட்டர் மதுவை சாக்கடையில் ஊற்றிய தாலிபன்கள்… காரணம் இதுதான்… – taliban pour 3,000 litres of liquor into canal

ஹைலைட்ஸ்:

  • ஆப்கானிஸ்தானில் மதுவை சாக்கடையில் ஊற்றிய தாலிபன்கள்
  • ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என்பதால் நடவடிக்கை
  • மதுவிற்ற 3 பேர் கைது

ஆப்கானிஸ்தானை தற்போது தாலிபன்கள் கைபற்றியுள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்கள் ஆட்சியில் உள்ளனர். இது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான். தாலிபன்கள் ஆட்சிக்கு வரும்போதே அவர் ஷரியத் சட்டத்தை கடுமையாக பின்பற்றுவார்கள் என கூறப்பட்டது.

இஸ்லாம் மதத்தின்படி மது அருந்துவது குற்றமான செயலாகும். ஆனால் உலகில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் அதை கடைபிடிப்பதில்லை. பலர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களாவே இருக்கின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து சமீபத்தில் வெளியான வீடியோ உள்ள பலரை அதிர்ச்சியாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் என்பதால் அங்கு மது அருந்த தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இன்டலிஜென்ஸ் இயக்குநரகம் சார்பில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்ததாகவும், மேலும் அவர்களிடமிருந்த 3000 லிட்டர் மது சாக்கடையில் கலக்கபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த பெண்ணின் பெயரை முடிந்தால் உச்சரியுங்கள் பார்க்கலாம்…
இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். கடந்தவாரம் ஆப்கானிஸ்தானின் பெண்கள் தனியாக வெளியே வராக்கூடாது, நீண்ட தூரம் பணிக்க தடை உள்ளிட்ட பல சட்டங்களை ஆப்கானிஸ்தானில் கொண்டு வந்தது குறித்து செய்தி வெளியான நிலையில் இந்த வாரம் மது ஒழிப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

READ  தனது மனைவி எங்கே என்று சொல்லாததால் துர்க் தனது மகளை 20 தோட்டாக்களால் கொடூரமாக கொன்றுவிடுகிறார்

We will be happy to hear your thoughts

Leave a reply

TRENDINGUPDATESTAMIL.NET NIMMT AM ASSOCIATE-PROGRAMM VON AMAZON SERVICES LLC TEIL, EINEM PARTNER-WERBEPROGRAMM, DAS ENTWICKELT IST, UM DIE SITES MIT EINEM MITTEL ZU BIETEN WERBEGEBÜHREN IN UND IN VERBINDUNG MIT AMAZON.IT ZU VERDIENEN. AMAZON, DAS AMAZON-LOGO, AMAZONSUPPLY UND DAS AMAZONSUPPLY-LOGO SIND WARENZEICHEN VON AMAZON.IT, INC. ODER SEINE TOCHTERGESELLSCHAFTEN. ALS ASSOCIATE VON AMAZON VERDIENEN WIR PARTNERPROVISIONEN AUF BERECHTIGTE KÄUFE. DANKE, AMAZON, DASS SIE UNS HELFEN, UNSERE WEBSITEGEBÜHREN ZU BEZAHLEN! ALLE PRODUKTBILDER SIND EIGENTUM VON AMAZON.IT UND SEINEN VERKÄUFERN.
Trendingupdatestamil