150 நாளில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி உள்ளோம் – அதிபர் ஜோ பைடன் |

150 நாளில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி உள்ளோம் – அதிபர் ஜோ பைடன் |

அமெரிக்காவில் வயது வந்தோரில் 65 சதவீதத்தினருக்கு குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக ஜோ-பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின், கொரோனா-தடுப்பூசி பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார். வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் அமெரிக்காவில் வயது வந்தோரில் 70 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்று விட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகள் நடந்தன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா-தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், நான் ஆட்சி பொறுப்பேற்றபோது நமது நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தது.

150 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நிலைமை எப்படி இருந்தது என நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  அமெரிக்கர்கள் அனைவருக்கும் போதிய தடுப்பூசி வினியோகம் என்பது நம்மிடம் இல்லை.

ஆனால், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு அதனை மாற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் ‘டெல்டா பிளஸ்’ ஆக தொடர்ந்து உருமாறி வருகிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா-தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=videoseries

READ  சீனாவைப் பொறுத்தவரை, தைவானின் சுதந்திரம் "என்றால் போர்" - எஸ்பிரெசோ டிவி செய்தி

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil