வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி அதிபர் ஜோ பைடன் தீபாவளி கொண்டாட்டம்| Dinamalar

வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி அதிபர் ஜோ பைடன் தீபாவளி கொண்டாட்டம்| Dinamalar

வாஷிங்டன்: தீபாவளி பண்டிகையொட்டி அதிபர் ஜோபைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார்.

அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

பின்னர் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்” இவ்வாறு அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார் .அமெரிக்க அதிபர் தனது மனைவியுடன் குத்துவிளக்கேற்றும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கமலா ஹாரிஸ் வாழ்த்து

இதே போன்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நம் தேசத்தின் மிகவும் புனிதமான மதிப்புகளை நினைவூட்டி, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபத் திருநாளாம், தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil