வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்.. பாதுகாப்பு தான்.. எப்படி வெரிபிகேஷன் செய்வது? | how to activate 2 step verification in whats app? Check details

வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்.. பாதுகாப்பு தான்.. எப்படி வெரிபிகேஷன் செய்வது? | how to activate 2 step verification in whats app? Check details

வாட்ஸ் அப் முடக்கம்

அவ்வப்போது பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் அல்லது ஹேக் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது கணக்கு முழு இழப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உங்களது வாட்ஸ் அப் கணக்கு முழுமையாக தடை செய்யப்படலாம். சமீபத்தில் ஹேக்கர்கள் மூலம் பல வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

பாதுகாப்புக்காக வெரிபிகேஷன்

பாதுகாப்புக்காக வெரிபிகேஷன்

இதனால் வாட்ஸ் அப் இது போன்ற நிலையை தடுப்பதற்காக, இரண்டு ஸ்டெப் வெரிபிகேஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் உங்களது வாட்ஸ் அப் பாதுகாப்பாக இருக்கலாம். இது உங்களது வாட்ஸ் அப்பில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். இது உங்களது வாட்ஸ் அப்பினை நீங்கள் பதிவு செய்த பிறகு, இரு ஸ்டெப் வெரிபிகேஷன் செய்யப்படும் என கூறியுள்ளது.

எப்படி வெரி-பிகேஷன் செய்வது?

எப்படி வெரி-பிகேஷன் செய்வது?

அது சரி அதனை எப்படி அப்டேட் செய்வது வாருங்கள் பார்க்கலாம். உங்களது வாட்ஸ் அப்பில் settings-னை பார்க்கவும். அதில் Two step verification என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களது 6 இலக்க நம்பரை பதிவு செய்ய கேட்கும். ஆக உங்களுக்கு உகந்த 6 இலக்க நம்பரை கொடுத்து கிளிக் செய்தால் அப்டேட் ஆகிக் கொள்ளும். அதன் பிறகு உங்களது மெயில் ஐடியினையும் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளவும். ஆனால் இந்த ஈமெயில் கொடுக்காமல் தவிர்க்கவும் ஆப்சன் உண்டு. ஆனால் அதனையும் கொடுத்து அப்டேட் செய்து கொண்டால் கூடுதல் பாதுகாப்பு என்கிறது நிறுவனம்.

பின் நம்பர் வேண்டும்

பின் நம்பர் வேண்டும்

இந்த பின் நம்பர் அப்டேட்டினை நீங்கள் அவ்வப்போது அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். இந்த Two step verification என்ற ஆப்சனிலேயே chage pin என்ற ஆப்சனும் உண்டு. அதே போல மெயில் ஐடியையும் மாற்றிக் கொள்ளும் ஆப்சன் உண்டு. ஆக நீங்கள் மாற்றிக் கொள்ள நினைத்தால் அதனையும் மாற்றிக் கொள்ளலாம். ஆக இதன் மூலம் நீங்கள் பாதுகாப்புடன் வாட்ஸ் அப்பினை பயன்படுத்த முடியும். உண்மையில் இது மிக நல்ல விஷயம் தானே.

READ  ஒன்பிளஸ் நோர்ட் என் 10 வடிவமைப்பு கிண்டல் செய்யப்பட்டது: இது எப்படி இருக்கும் என்பதை இங்கே காணலாம்

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil