வயிற்றுக்குள் கேட்ட விசித்திர சத்தம்! மாத்திரைக்கு பதில் ஹெட்போனை விழுங்கிய பெண்.. பின்னர் நடந்தது என்ன?

வயிற்றுக்குள் கேட்ட விசித்திர சத்தம்! மாத்திரைக்கு பதில் ஹெட்போனை விழுங்கிய பெண்.. பின்னர் நடந்தது என்ன?

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மாத்திரை என நினைத்து ஹெட்போனை விழுங்கிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வருபவர் Carly. இவர் சில நாட்களாகவே கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வயிற்று வலிக்கு மாத்திரை எடுக்க முடிவு செய்தார்.

அப்போது தவறுதலாக மாத்திரைக்கு பதில் வயர்லெஸ் ஹெட்போனை விழுங்கியுள்ளார். இந்த செயலை குறித்து அந்த பெண்ணே அழுது கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கேமரா முன் அமர்ந்த Carly கூறியதாவது, நான் வயிற்று வலியால் படுக்கையில் ஓய்வில் இருந்தேன்.

அப்போது ஒரு கையில் ஹெட்போன்ஸ் மறு கையில் மாத்திரையும் வைத்திருந்தேன். இந்த சமயத்தில் மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கியுள்ளேன். அதன் பிறகு எனது ஹெட்போனை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை.

இருப்பினும் லொகேஷன் நான் இருக்கும் இடத்தை காட்டியதால் சந்தேகப்பட்டு போனில் இசையை வாசித்தேன். அதனின் சத்தம் எனது வயிற்றில் கேட்டவுடன் நான் மிகவும் பயந்தேன். இதையடுத்து நான் உடனடியாக மருத்துவரிடம் சென்றேன்.

எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் ஹெட்போன்ஸ் வயிற்றுக்குள் இருப்பது உறுதியானது. ஆனால் எந்தவித உறுப்புகளும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர் ஆறுதல் வார்த்தை தெரிவித்தார். சிகிச்சை எதுவும் செய்யாமலேயே இரண்டாவது நாளில் இயற்கையான முறையில் வயிற்றுக்குள் இருந்த ஹெட்போன் வெளியே வந்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

READ  கினியா வளைகுடாவில் ஒரு துருக்கிய கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் செல்கின்றனர்: அங்கு காயமடைந்து கொல்லப்படுகிறார்கள்

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil