ரூ.10,000-க்குள்ள சூப்பர் ஸ்மார்ட்போன் வேணுமா? – இதுல ஒண்ணு செலக்ட் பண்ணுங்க! | Budget Model smartphones available for under 10000 Rupees | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தையும் விரல் நுனிக்கு கொண்டு வந்து விடுகின்றன ஸ்மார்ட் போன்கள். வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என ஸ்மார்ட் போன்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. குறிப்பாக பட்ஜெட் ரக ஸ்மார்ட் போன்களுக்கு டிமாண்ட் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் ரூ.10ஆயிரத்துக்குள் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட் போன்கள் குறித்து ஒரு பார்வை.

படம்

மோட்டோ E7 பிளஸ்

குவால்கம் ஸ்னேப்டிரேகன் 460 பிராஸசர் கொண்ட இந்த மோட்டோ E7 பிளஸ் போனில் 4 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 5000 மில்லியாம்ப் கொண்ட பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான மைக்ரோ USB சார்ஜிங் போர்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 6.5 இன்ச் HD டிஸ்பிளேவில் வெளியாகியுள்ளது. 48 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சலோடு பிரைமரி கேமிரா வசதி ரியர் சைடில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 9499 ரூபாய்.

படம்

ரியல்மி நார்சோ 10A

கிட்டத்தட்ட ரியால்மி C3 போனில் உள்ள ஹார்டுவேர் தான் நார்சோ 10Aவில் இடம் பெற்றுள்ளது. 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் ரியர் சைடில் மூன்று கேமிராவும், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமிராவும் இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் பேட்டரி திறனில் இந்த போன் இயங்குகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட போன் 8999 ரூபாய்க்கும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட போன் 9999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

படம்

ரெட்மி 9

மீடியா டெக் ஹீலியோ ஜி35 பிராஸசரில் இயங்கும் இந்த போனிலும் 5000 மில்லியாம்ப் பேட்டரி இடப்பெற்றுள்ளது. ஆண்டராய்ட் 10இல் இயங்கும் இந்த போனில் ரியர் சைடில் 13 மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட இரண்டு கேமிரா உள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ USB போர்ட் வசதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 9499 ரூபாய் ஆகும்.

படம்

ரியால்மி C12 மற்றும் C15

அண்மையில் ரியால்மி C சீரிஸில் இரண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட் போன்களை லாஞ்ச் செய்திருந்தது. ரியால்மி C12 மற்றும் C15 என இரண்டு போன்களும் 6.5 இன்ச் HD டிஸ்பிளேவில் வெளியாகி உள்ளன. மீடியா டெக் ஹீலியோ ஜி35 பிராஸசரில் இந்த போன்கள் இயங்குகின்றன. 6000 மில்லியாம்ப் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. C12 போனில் மூன்று கேமிராவும், C15 போனில் நான்கு கேமிராவும் ரியர் சைடில் பொருத்தப்பட்டுள்ளன. C12 8999 ரூபாய்க்கும், C15 9999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

படம்

ரெட்மி 9 பிரைம்

READ  சோனி PS4 • Eurogamer.net இல் விளையாடும் மகிழ்ச்சியற்ற சைபர்பங்க் 2077 ரசிகர்களைத் திருப்பித் தரத் தொடங்கியுள்ளது

பார்ப்பதற்கு ரெட்மி 9 போனை போன்றே 9 பிரைமும் உள்ளது. இந்த போன் 6.53 டிஸ்பிளேவில் வெளி வந்துள்ளது. மீடியா  டெக் ஹீலியோ ஜி80 பிராஸசரில் இயங்குகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்ன்ல் மெமரி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியில் இந்த போன் கிடைக்கிறது. ரியர் சைடில் நான்கு கேமிரா உள்ளது. 5020 மில்லியாம்ப் கொண்ட  பேட்டரி  இதில் இடம்பெற்றுள்ளது. 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட போனின் விலை 9999 ரூபாயாகும்.

Written By
More from Muhammad Hasan

கேலக்ஸி லேப்ஸ் பயன்பாடு உங்கள் தொலைபேசியை புதியதாக உணர இரண்டு தொகுதிகள் சேர்க்கிறது

சாம்சங்கின் கேலக்ஸி ஆய்வகங்கள் ஒரு தொகுதிகள் பயனுள்ள தொகுப்பு பேட்டரி மேலாண்மை முதல் பயன்பாடுகளின் செயல்திறனை...
Read More

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன