ரிஷாட் பதியூதினின் வீட்டில் இன்று நடந்த மரண சம்பவம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

ரிஷாட் பதியூதினின் வீட்டில் இன்று நடந்த மரண சம்பவம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஒருவர் தீக்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் கொழும்பு பதில் நீதவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

டயகம பிரதேசத்தை சேர்ந்த இஷாலினி ஜுட் குமார் (வயது – 16) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்,

அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73ஆவது வோட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்வையிடுவதற்காக கொழும்பு பதில் நீதவான் சென்றுள்ளார்.

பின்னர் சிறுமி தீக்காயங்களுக்குள்ளான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின், கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள வீட்டையும் நீதவான் பார்வையிட்டுள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள வேண்டும் என பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றத்தில் தகவல் வெளியிடுமாறு நீதவான் நீதிமன்ற சட்ட வைத்தியரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி உடலில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் குறித்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ  எரிசக்தி துறை CO2 உமிழ்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் வீழ்ச்சியடைகிறது, ஆனால் உலகின் பிற பகுதிகளில் உயரும் | சுற்றுச்சூழல்

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil