ஊழியர்களின் விடுமுறைகளை இரத்துச் செய்து, இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையைப் புறக்கணித்து, கொழும்பில் பாரிய அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் தலைநகர் கொழும்பில் உள்ள ஊழியா்களும் பங்கேற்பதால், மின்தடைகள் மற்றும் ஏனைய அவசரப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என அச்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாளை நடக்கவிருப்பது பணிப்புறக்கணிப்பு அல்ல, போராட்டம் எனவும், முடிந்தால் இதனைத் தடுக்குமாறும் அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
”நாளை(03) மதியம் 12 மணிக்கு இலங்கை மின்சார சபை முன்றலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் இந்த இடத்திற்கு வருகை தரவுள்ளனர்.
ஊழியர்கள் கொழும்பிற்கு வருகை தருவதை தடுக்க இந்த அரசாங்கத்திற்கு முடியாது. அதற்கு நாங்கள் இடம்கொடுக்கவும் மாட்டோம். நாளை திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடக்கும்” என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
“எதிர்கால டீன் சிலை. ஹார்ட்கோர் ட்விட்டர் டிரெயில்ப்ளேஸர். ஆத்திரமூட்டும் வகையில் தாழ்மையான பயண சுவிசேஷகர்.”