பொறுமையிழந்த போராட்டக்காரர்கள்-வடக்கு ஆளுநர் செயலக நுழைவாயில் மற்றும் யாழ்-கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டம்!

பொறுமையிழந்த போராட்டக்காரர்கள்-வடக்கு ஆளுநர் செயலக நுழைவாயில் மற்றும் யாழ்-கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 8 வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாண காவல்துறையினர் மாற்று வீதியால் பயனத்தினை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உடனடியாக 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வருகைதந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ  கொரோனா வைரஸ் நாவல் கொரோனா கோவிட் 19 23 செப்டம்பர் | கொரோனா வைரஸ் நாவல் கொரோனா கோவிட் 19 செய்தி உலக வழக்குகள் நாவல் கொரோனா கோவிட் 19 | அக்டோபர் மாதத்திற்குள் ரஷ்யா இரண்டாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கக்கூடும், இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட மனித பரிசோதனையை நிறைவு செய்கிறது; உலகில் 3.19 கோடி வழக்குகள்

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil