‘டெக் சம்பவங்கள் 2’ பேஸ்புக்கின் தாய் நிறுவனம் அதிரடி முடிவு; கூகுளுக்கு 20000 கோடி அபராதம் உறுதி! | A fine of Rs 20,000 crore has been confirmed for Google: EU

‘டெக் சம்பவங்கள் 2’ பேஸ்புக்கின் தாய் நிறுவனம் அதிரடி முடிவு; கூகுளுக்கு 20000 கோடி அபராதம் உறுதி! | A fine of Rs 20,000 crore has been confirmed for Google: EU

லண்டன்

ஓய்-வேல்முருகன் பி

வெளியிடப்பட்டது: வியாழன், 11 நவம்பர், 2021, 10:26 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

லண்டன்: கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அபராதத்தை உறுதி செய்துள்ளது. தனக்கு வேண்டிய நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பரங்களை பயனர்களுக்கு பரிந்துரை செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.

கூகுள் தேடுபொறி நிறுவனம், தனக்கு வேண்டிய நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பரங்களை மட்டுமே பயனர்களுக்கு பரிந்துரைத்து முன்னுரிமை அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியது. விதிமுறையை மீறியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய கமிஷன் ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்தது.

நியூசிலாந்து-இங்கிலாந்து அரையிறுதியில் ஆட்டத்தையே மாற்றிய அந்த மொமண்ட்! 3 ஓவரில் விளாசிய 57 ரன்கள்நியூசிலாந்து-இங்கிலாந்து அரையிறுதியில் ஆட்டத்தையே மாற்றிய அந்த மொமண்ட்! 3 ஓவரில் விளாசிய 57 ரன்கள்

இதனை தள்ளுபடி செய்யக் கோரி கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனால் கூகுள் நிறுவனம் 20 ஆயிரம் கோடி அபராதத்தை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மெட்டா

மெட்டா

இதனிடையே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வ விளம்பரங்களை நீக்க பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடிவு செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் பயனர்கள் இணையத்தில் தேடும், அவர்கள் விரும்பும் கட்டுரைகள், தகவல்கள் அடிப்படையில் அது சம்பந்தப்பட் விளம்பரங்களை பேஸ்புக் தனது வலைப்பக்கம் மூலம் வழங்கி வருகிறது.

பாலியல், அரசியல்

பாலியல், அரசியல்

உதாரணமாக பேஸ்புக்கில் நீங்கள் உணவு விஷயங்கள் குறித்து அதிகமான தகவல்களை தேடினாலோ படித்தாலோ அந்த துறை சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அனுப்பப்படும். இந்நிலையில் இதுபோன்ற விளம்பரங்களில் இனம், உடல் நலம், பாலியல், அரசியல் நம்பிக்கைகள், மத நடவடிக்கைகள் போன்றவற்றை உணவுப்பூர்வமான விஷயங்களாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வரையறுத்துள்ளது. அத்தகைய விளம்பரங்களை தனது அனைத்து சமூகவலைதளங்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மெட்டா நிறுவனம் தனது வணிக நோக்கத்திற்கான வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

தவறான தகவல்

தவறான தகவல்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வ விளம்பரங்களை நீக்கும் முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி அமலுக்கு வரும் என்று மெட்டா அறிவித்துள்ளது. இந்த விளம்பரங்களை நீக்குவதற்கான காரணங்களும் இருக்கிறது. இதுபோன்ற விளம்பரங்களில் சில தவறான தகவல்களை பரப்புவதால் பயனர்கள் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

READ  Protest against military rule: 1.25 lakh teachers suspended || ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 1.25 லட்சம் ஆசிரியர்கள் சஸ்பெண்டு

மெட்டா பங்குகள்

மெட்டா பங்குகள்

இதன் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டாவின் இந்த முடிவிற்க விளம்பரதாரர் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பால் மெட்டாவின் பங்குகள் ஒரு சதவீதம் சரிந்தன. விளம்பரங்கள் சரிந்தாலும் உணர்வு பூர்வமான விளம்பரங்களை நீக்குவது உறுதி என மெட்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆங்கில சுருக்கம்

கூகுளுக்கு ரூ.20,000 கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மேல்முறையீட்டை ஐரோப்பிய நீதிமன்றம் தள்ளுபடி செய்து அபராதத்தை உறுதி செய்தது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளிப்படையான பாலியல் விளம்பரங்களை அகற்ற மெட்டா முடிவு செய்துள்ளது.

முதலில் வெளியான கதை: வியாழன், நவம்பர் 11, 2021, 10:26 [IST]

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil