சவுதி தூதுவர் முன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இப்படி அமர்ந்திருப்பது குறித்து கேள்வி

சவுதி தூதுவர் முன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இப்படி அமர்ந்திருப்பது குறித்து கேள்வி

பட ஆதாரம், சமூக ஊடகம்

சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பு யாருக்கும் மறைக்கப்படவில்லை.

நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு அவ்வப்போது கடன் கொடுத்து உதவுவது சவுதி அரேபியா.

ஆனால் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மற்றும் பாகிஸ்தானுக்கான சவுதி தூதர் நவாப் பின் சயீத் அல்-மல்கி ஆகியோரின் சமீபத்திய சந்திப்பின் புகைப்படங்கள் விவாதப் பொருளாகவே உள்ளன. இதைப் பார்த்து, சவுதி அரேபியாவை பாகிஸ்தான் அவமதிப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சந்திப்பிலிருந்து வெளிவந்த வீடியோவில், ஷா மெஹ்மூத் குரேஷி சவுதி அரேபியாவின் தூதரை நோக்கி காலை உயர்த்தி அமர்ந்திருப்பதைக் காணலாம். குரேஷியின் ஷூ சவுதி தூதரை நோக்கி உள்ளது. மறுபுறம், தூதர் அல்-மல்கி அவருக்கு முன்னால் பணிவுடன் அமர்ந்திருக்கிறார்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil