கூட்டமைப்பினருடன் கொழும்பில் முக்கிய சந்திப்பு! – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அழைப்பு

கூட்டமைப்பினருடன் கொழும்பில் முக்கிய சந்திப்பு! – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சந்திப்பிற்கான அழைப்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் ஆகியோர் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.

அண்மை காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசியதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான சமூக ஒற்றுமை ஆகியவற்றுக்கு இலங்கையை ஆதரிக்க பிரித்தானியா ஆர்வமாக உள்ளதாக ஷாரா ஹல்டன் குறிப்பிட்டுள்ளார்.

READ  அலாஸ்காவில் கழிப்பறையில் இருந்தபோது கரடி ஒரு பெண்ணைத் தாக்கியது

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil