இலங்கை: இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கிய சீன நிறுவனம்! – பின்னணி என்ன? | China suspends Sri Lankan solar plants after Indias move

இலங்கை: இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கிய சீன நிறுவனம்! – பின்னணி என்ன? | China suspends Sri Lankan solar plants after Indias move

இலங்கையிலிருக்கும் மூன்று முக்கியத் தீவுகளில் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்ட ஒப்பந்தத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு, மாலத்தீவை நோக்கிச் சென்றிருக்கிறது, சீனாவின் சினோசர் – இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனம். இலங்கையைவிட்டு சீன நிறுவனம் வெளியேறியிருப்பதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக அதிரடித் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், சீன நிறுவனத்தைவிட்டு கைநழுவிய அந்தத் திட்டம், இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான அதானியின் நிறுவனத்துக்குக் கைமாறுவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இலங்கை இந்திய எல்லை

இலங்கை-சீன நிறுவனம் ஒப்பந்தம்:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் இருக்கும், யாழ்ப்பாணத்துக்குட்பட்ட மூன்று முக்கியத் தீவுகள் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு. டீசல் மூலம் மட்டுமே மின்சாரம் கிடைத்துக்கொண்டிக்கும் இந்தத் தீவுகளில், காற்றாலை மற்றும் சோலார் மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்கான உலகளாவிய ஏலத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இந்திய நிறுவனங்கள் உட்பட, பல நாடுகளின் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைக் கைப்பற்ற போட்டியிட்டபோது, சீனாவைச் சேர்ந்த சினோசர் – இடெக்வின் நிறுவனம், சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் திட்டத்தைக் கைப்பற்றியது. கடந்த ஜனவரி (2021) மாதம், அதிகாரபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் சீனா ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

READ  தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆதரவாக கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர்களை நிறுத்த WHO அழைப்பு விடுத்துள்ளது

We will be happy to hear your thoughts

Leave a reply

Trendingupdatestamil